Sunday, 6 July 2014

ஒன்றுக்கும் மேற்பட்ட இயங்குதளங்களை ஒரே யுஎஸ்பி ட்ரைவில் !!!!!!!!!!!!!!!





ஒன்றுக்கும் மேற்பட்ட இயங்குதளங்களை ஒரே யுஎஸ்பி ட்ரைவில் இருந்து நிறுவ
கணினி வல்லுனர் என்றால் கணிப்பொறி பற்றி முழுவதும் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். நாளுக்கு நாள் புதுப்புது வளர்ச்சியை கணினிதுறை கண்டு வருகிறது. கணினி கண்டுபிடிக்க பட்ட காலத்திலிருந்து இன்று வரை பல்வேறு பரிமாணங்களில் வளர்ந்துவிட்டது. அந்த வகையில் ஒரு கணினி வல்லுனர் என்றால் நிச்சயம் இயங்குதளம் நிறுவ கண்டிப்பாக தெரிந்து இருக்க வேண்டும். இயங்குதளம் நிறுவுதல் என்றால் சாதாரணமாக விண்டோஸ், லினக்ஸ் இயங்குதளங்களை நிறுவுதல் மட்டுமே ஆகும். அதிலும் லினக்ஸ் இயங்குதளம் முன்பு நிறுவுதலை காட்டிலும் சற்று எளிதாக வந்துவிட்டது. விண்டோஸ் இயங்குதளம் பற்றி சொல்ல வேண்டியது இல்லை. கணினிக்கு புதியவராக இருந்தாலும் ஒரு மென்பொருளை நிறுவுதல் போன்று விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவிவிட முடியும். அந்த அளவுக்கு எளிதாக வந்துவிட்டது நான் கூற வந்தது இயங்குதளம் நிறுவுதல் பற்றி அல்ல. ஒரே யுஎஸ்பி ட்ரைவில் இருந்து ஒன்றுக்கு மேற்பட்ட இயங்குதளங்களை பூட் செய்வது எப்படி என்றுதான்.


இது எப்படி சாத்தியம் என்று பலருக்கும் சந்தேகம் வரும், கண்டிப்பாக முடியும் ஒரே யுஎஸ்பி ட்ரைவில் இருந்து ஒன்றுக்கும் மேற்பட்ட இயங்குதளங்களை நிறுவ முடியும். அதுவும் விண்டோஸ், லினக்ஸ் இயங்குதளங்களை கூட்டாக ஒரே யுஎஸ்பி ட்ரைவில் பூட் செய்ய முடியும். இது ஒரு இலவச மென்பொருள் வழிவகை செய்கிறது.


ஐஎஸ்ஒ பைல்களாக இருக்கும் இயங்குதள கோப்புகள் இருந்தால் மட்டுமே யுஎஸ்பி ட்ரைவில் பூட் செய்ய முடியும்.


ஒரு காலத்தில் இயங்குதளங்களை நிறுவுதல் என்றால் சிடி/டிவிடி ட்ரைவுகளை பயன்படுத்தி மட்டுமே கணினி வல்லுனர்கள் நிறுவி வந்தனர். அது நாளடைவில் மாற்றம் அடைந்து தற்போது யுஎஸ்பி ட்ரைவினை பயன்படுத்தி கணினியில் இயங்குதளங்களை நிறுவி வருகிறனர். முதலில் . லினக்ஸ் இயங்குதளங்களை யுஎஸ்பி ட்ரைவ் பயன்படுத்தி நிறுவுதல் மட்டும் இருந்தது. அதன்பின் விண்டோஸ் இயங்குதளத்தையும் யுஎஸ்பி ட்ரைவ் மூலம் நிறுவ மைக்ரோசாப்ட் நிறுவனமே அதற்கான மென்பொருளையும் இலவசமாகவே வழங்கியது. நாம் இந்த மென்பொருள்களை கொண்டு இதுவரை ஒரு யுஎஸ்பி ட்ரைவில் இருந்து ஒரு இயங்குதளத்தை மட்டுமே பூட் செய்து வந்து இருப்போம். குறிப்பிட்ட இயங்குதளங்களை பூட் செய்ய தனித்தனியே அப்ளிகேஷன்கள் தேவைப்படும். அவ்வாறு இல்லாமல் அனைத்து இயங்குதளங்களையும் பூட் செய்ய ஒரே மென்பொருள் உதவி செய்கிறது. மேலும் இந்த மென்பொருளை பயன்படுத்தி ஒன்றுக்கும் மேற்பட்ட இயங்குதளங்களை ஒரே யுஎஸ்பி ட்ரைவில் இருந்து பூட் செய்ய முடியும்.


மென்பொருளை தரவிறக்க சுட்டி






மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும். பின் யுஎஸ்பி ட்ரைவினை கணினியில் இணைத்துவிட்டு பின் அந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். இது ஒரு போர்ட்டபிள் மென்பொருள் ஆகும். அடுத்து வரும் விண்டோவில் யுஎஸ்பி ட்ரைவினை தேர்வு செய்யவும். பின் உங்களுடைய இயங்குதளம் எது என தெரிவு செய்யவும். பின் இயங்குதளத்தின் இமேஜ் கோப்பினை தேர்வு செய்து விட்டு பின் Create என்னும் பொத்தானை அழுத்தவும்.






சிறிது நேரம் இயங்குதளம் கணினியில் இருந்து யுஎஸ்பி ட்ரைவுக்கு பூட்டபிள் பைலாக கன்வெர்ட் செய்யப்படும். பின் யுஎஸ்பி ட்ரைவில் இயங்குதளம் உருவாக்கப்பட்டுவிட்டது, மற்றொடு இயங்குதளத்தை யுஎஸ்பி ட்ரைவில் நிறுவ வேண்டுமா என்ற அறிவிப்பு செய்தி வரும்.






பின் Yes என்னும் பொதியை அழுத்தவும், மீண்டும் இயங்குதளத்தினை தேர்வு செய்து, பின் இயங்குதளத்திற்கான சரியான ஐஎஸ்ஒ கோப்பினை தெரிவு செய்து பின் Create என்னும் பொத்தானை அழுத்தவும்.






மீண்டும் யுஎஸ்பி ட்ரைவில் இயங்குதளம் பூட்டபிள் பைலாக கன்வெர்ட் செய்யப்படும். பின் யுஎஸ்பி ட்ரைவில் இயங்குதளம் உருவாக்கப்பட்டுவிட்டது, மற்றொடு இயங்குதளத்தை யுஎஸ்பி ட்ரைவில் நிறுவ வேண்டுமா என்ற அறிவிப்பு செய்தி மீண்டும் வரும். அப்போது வேண்டுமெனில் மீண்டும் Yes பொத்தானை அழுத்தி அடுத்த இயங்குதளத்தை யுஎஸ்பி ட்ரைவில் இணைத்துக்கொள்ளவும். இல்லையெனில் No பொத்தானை அழுத்தவும். பின் இயங்குதளம் யுஎஸ்பி ட்ரைவில் பூட் செய்யப்பட்டுவிட்டது என்ற செய்தி வரும்.






பின் வழக்கம் போல் பயாஸ் சென்று யுஎஸ்பி ட்ரைவில் இருந்து பூட் ஆகும் செட் செய்து கொள்ளவும். யுஎஸ்பி ட்ரைவில் இருந்து பூட் ஆகும் போது எந்த இயங்குதளத்தை நிறுவ வேண்டும் என்று கேட்கும் அப்போது நாம் தெரிவு செய்யும் இயங்குதளம் நிறுவப்படும்.


இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் நம்முடைய இயங்குதளத்தின் அளவிற்கேற்ப யுஎஸ்பி ட்ரைவின் அளவும் இருக்க வேண்டும். விண்டோஸ் ஏழு, எட்டு இயங்குதளம் என்றால் 4 Gb லிருந்து அதற்கு மேல் அளவுடைய யுஎஸ்பி ட்ரைவினை பயன்படுத்தவும்

No comments:

Post a Comment