Showing posts with label Internet. Show all posts
Showing posts with label Internet. Show all posts

Sunday, 6 July 2014

குரோம் பிரவுசர் செட்டிங்ஸ்










பிரவுசர் பயன்பாட்டில், குரோம் பிரவுசர் தொடர்ந்து தன் பயனாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருக்கு இணையாக இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. மொத்த பயனாளர்களில், இரண்டும் 30 சதவீதத்திற்கும் மேலான பங்கினைக் கொண்டிருக்கின்றன.
குரோம் பிரவுசரின் தொடர்ந்த பரவலுக்குக் காரணங்களாக நாம் பல சிறப்புகளைக் கூறலாம். இதன் வேகத்திற்கு அடுத்தபடியாக, இணைய தளம் மற்றும் தேடலுக்கென ஒரே விண்டோ இயக்கம் பலரைக் கவர்ந்துள்ளது. தேடலுக்கென தனியே விண்டோவினை நாம் இதில் தேட வேண்டியதில்லை. இந்த அமைப்பிலேயே நாம் இன்னும் சிலவற்றை நம் விருப்பப்படி அமைத்திடலாம். அதன் மூலம் நாம் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தி, விரைவாக பிரவுசரைச் செயல்பட வைத்திடலாம். அவற்றை இங்கு பார்க்கலாம்.


1. பக்கங்களை எளிதாக படிக்க:


குரோம் பிரவுசர் காட்டும் இணைய தளப்பக்கங்களின் டெக்ஸ்ட் மற்றும் படங்களை நாம் விரும்பும் அளவில், காண்பதற்குத் தெளிவாக இருக்கும் வகையில் அமைத்திடலாம். கண்ட்ரோல் (Ctrl) கீயினை அழுத்திக் கொண்டு, மவுஸின் வீலை முன்புறமாக நகர்த்தினால், இவை பெரிதாகவும், பின்புறமாக சுழற்றினால், சிறியதாகவும் மாறும். நம் தேவைக்கேற்ப இதனை அமைத்து நிறுத்தலாம். உங்களுடைய மவுஸில் ஸ்குரோல் வீல் இல்லை என்றால், பிரவுசரின் மேல் வலது மூலையில் உள்ள ஸ்பானர் படத்தில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் ஸூம் செட்டிங்ஸில் + மற்றும் - பட்டன்களை அழுத்தி இதனை அமைக்கலாம்.
அனைத்து இணைய தளங்களுக்குமான எழுத்தின் அளவையும் இந்த வகையில் அமைத்திடலாம். ஸ்பானர் ஐகானில் கிளிக் செய்து, Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். தொடர்ந்து ‘Show advanced settings’ என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர் கீழாகச் சென்று, Web content என்ற பிரிவினை அடையவும். இங்கு எழுத்தின் அளவை அமைத்திட Large or Very Large என இரு ஆப்ஷன்ஸ் கிடைக்கும். இதனைப் பயன்படுத்தி, அனைத்து இணைய தளங்களிலும் டெக்ஸ்ட் காட்டப்படும் அளவினை அமைக்கலாம்.
மற்ற பிரவுசர்களில் உள்ளது போலவே, குரோம் பிரவுசரிலும், எப்11 கீ அழுத்தி, மானிட்டர் திரை முழுவதும், இணைய தளம் தோன்றும் வகையில் அமைக்கலாம்.



2. செட்டிங்ஸ் அமைப்பு எங்கும் கிடைக்க:


பிரவுசரில் அமைத்த அமைப்புகள், நாம் அமைத்த கம்ப்யூட்டரில் மட்டுமே கிடைக்கும். மற்ற கம்ப்யூட்டர்களிலும் இவற்றை அமைக்க குரோம் பிரவுசர் வசதி செய்துள்ளது. இதன் மூலம் பிரவுசர் செட்டிங்ஸ் மட்டுமின்றி, நம் தேவைக்கான அமைப்புகள், புக்மார்க்ஸ் அப்ளிகேஷன் ஆகியவற்றையும் கிளவ்ட் கம்ப்யூட்டிங் வகையில் இணைத்து சேவ் செய்திடலாம். இதற்கு, முதலில் உங்கள் கூகுள் அக்கவுண்ட் மூலம் உள்ளே செல்லவும். உங்களுக்கு அக்கவுண்ட் இல்லை என்றால், ஒன்றை உருவாக்கவும். இதன் மூலம் கூகுள் தளத்தில் நுழைந்தவுடன், ஸ்பேனர் ஐகானில் கிளிக் செய்திடவும். பின்னர் Sign in என்ற பிரிவில் Settings பகுதியைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு ‘Advanced sync settings’ என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இதில் எந்த செட்டிங்ஸ் எல்லாம், கிளவ்ட் கம்ப்யூட்டிங் வகையில் இணைக்க வேண்டுமோ, அவற்றை எல்லாம், தேர்ந்தெடுக்கவும். மாறா நிலையில், குரோம் உங்களுடைய அனைத்து செட்டிங்ஸ் அமைப்புகளை யும் இணைக்கிறது. இது போன்ற வேலைகளை, பொதுவான கம்ப்யூட்டர் மையத்தில் உள்ள கம்ப்யூட்டர்களில் அல்லது மற்றவர்களும் பயன்படுத்தக் கூடிய கம்ப்யூட்டர்களில் செய்திட வேண்டாம். இதனால், உங்கள் செட்டிங்ஸ்களை மற்றவர்கள் அறிந்து மாற்றிக் கொள்ள வழி வகுக்கும். இதனை ஏற்படுத்திய பின்னர், நீங்கள் எந்தக் கம்ப்யூட்டரில் லாக் இன் செய்தாலும், குரோம் பிரவுசரில் அமைக்கப்பட்ட அனைத்து செட்டிங்ஸ் அமைப்பும் கிடைக்கும்.



3. தொடக்க நிலை தேவைகள்:


மாறா நிலையில், குரோம் பிரவுசரில் விண்டோ ஒன்று திறக்கப்படுகையில், பிரவுசர் புதிய டேப் (New Tab) பக்கத்தினைக் காட்டும். இது காலியாக உள்ள பகுதி. இதில் நீங்கள் அடிக்கடி சென்று பார்த்த இணையதளங்களின் முகப்பு பக்கங்களின் படங்கள் இருக்கும். இதனையும் உங்கள் விருப்பப்படி அமைக்கலாம். ஸ்பேனர் ஐகான் கிளிக் செய்து, Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து On startup என்ற பிரிவிற்குச் செல்லவும். இங்கு ‘Open a specific page or set of pages’ என்ற ரேடியோ பட்டனில் கிளிக் செய்திடவும். தொடர்ந்து அடுத்து உள்ள Set pages என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். இதனை அடுத்து ‘Use current pages’ என்பதில் கிளிக் செய்திடலாம். அல்லது மாறாக, நீங்கள் விரும்பும் இணையதளத்தினை ஹோம்பேஜாக மாற்ற, அந்த இணைய தளத்தின் முகவரியை டைப் செய்திடலாம். இங்கு, ஒன்றுக்கு மேற்பட்ட இணைய தளங்களின் முகவரிகளையும் டைப் செய்து அமைக்கலாம். பிரவுசர் திறக்கப்படும் போது, இவை அனைத்தும், ஒவ்வொரு டேப்பில் திறக்கப்படும். இங்கு இன்னொரு ஆப்ஷனையும் பார்க்கலாம். நீங்கள் இறுதியாகப் பார்த்த இணைய தளங்களையே பெற்று, தொடர்ந்து பணியாற்ற விரும்பினால், ‘Continue where I left off’ என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கலாம்.



4. பிரச்னைகளை கண்டறியும் வழிகள்:


குரோம் பிரவுசர் இயக்கத்தில் பிரச்னைகள் ஏற்படுகையில், அவற்றைத் தீர்க்கவும் சரி செய்திடவும் பல வழிகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, ‘about’ என்ற கட்டளைச் சொல்லைப் பயன்படுத்தி, பிரவுசரின் வெவ்வேறு பகுதிகளில் என்ன நடக்கிறது என்பதனை அறியலாம். எடுத்துக்காட்டாக, about:memory என இணைய முகவரிக்கான கட்டத்தில் டைப் செய்து என்டர் செய்தால், பிரவுசர், இணைய தளப் பக்கங்கள், ப்ளக் இன் புரோகிராம்கள் ஆகியவை மெமரியில் எவ்வளவு இடத்தை எடுத்துக் கொண்டு இயங்கி வருகின்றன என்று காட்டப்படும். இதே போன்ற தகவல்களை, இணையதளத்தினைப் பார்வையிடுகையில், ஷிப்ட் கீ அழுத்தி எஸ்கேப் கீ (Esc) அழுத்தினாலும் கிடைக்கும். இங்கு குரோம் பிரவுசருக்கான டாஸ்க் மானேஜர் டயலாக் பாக்ஸ் விண்டோ திறக்கப்பட்டு இந்த தகவல்கள் காட்டப்படும். இதற்கு மாறாக about:plugins என டைப் செய்தால், ப்ளக் இன் புரோகிராம்கள் மட்டும் எடுத்துக் கொண்ட மெமரி பற்றிய தகவல்கள் கிடைக்கும். இதன் மூலம் பிரச்னைக்குரிய ப்ளக் இன் புரோகிராம்களை நாம் கண்டறிந்து நீக்கிவிடலாம்.



5. மின்னல் வேக கணக்கீடுகள்:


குரோம் பிரவுசரைப் பயன்படுத்தி, நாம் கணக்கிட வேண்டியவற்றை, மிக வேகமாகச் செயல்படுத்தலாம். மற்ற பிரவுசர்கள் மூலம் இணையத்தில் இருக்கையில், இந்த கணக்கிடும் செயல்பாட்டினை, கூகுள் வெப்சைட் சென்று மேற்கொள்ள வேண்டியதிருக்கும். குரோம் பிரவுசரில், இவற்றை பிரவுசரிலேயே மேற்கொள்ளலாம். நீங்கள் மேற்கொள்ள விரும்பும் கணக்குகளை அட்ரஸ் பாரிலேயே டைப் செய்திடுங்கள். கணக்குகளை வழக்கமான /, *, + மற்றும் வகுத்தல், பெருக்கல், கூட்டல் மற்றும் கழித்தல் அடையாளங்களுடன் அமைத்திடுங்கள். அமைத்துவிட்டு, என்டர் பட்டன் தட்டினால், குரோம் உங்களுக்கான கணக்கினை மேற்கொண்டு, தட்டிய வேகத்தில் விடையைத் தரும். இந்த கணக்கின் முடிவு, 32 பட்டன் அமைந்த பிரவுசரின் உள்ளாக அமைந்த கால்குலேட்டரில் காட்டப்படும். வழக்கமான சயின்டிபிக் கால்குலேட்டர் போலத் தோற்றத்தில் இது காட்டப்படும். இன்னும் உங்களுக்கு சில வேடிக்கை வேண்டுமெனில், கூகுள் சர்ச் பாக்ஸில் உள்ள மைக்ரோ போன் ஐகானில் கிளிக் செய்திடவும். இதன் பின்னர், நீங்கள் மேற்கொள்ள விரும்பும் கணக்குகளை, குரல் மூலமாகவே அமைத்துச் செயல்படுத்தலாம். இதற்கென மைக் ஒன்று இணைக்கப்பட வேண்டும். லேப்டாப் கம்ப்யூட்டரில் மைக் இருப்பதால், இணைக்க வேண்டிய அவசியமில்லை.



6. டவுண்லோட் போல்டர் மாற்ற:


குரோம் பிரவுசர் வழியாக, இணைய தளத்திலிருந்து ஏதேனும் ஒரு பைலை தரவிறக்கம் செய்திடுகை யில், அது பைலை, மை டாகுமெண்ட்ஸ் போல்டருக்குள்ளாக உள்ள டவுண்லோட்ஸ் என்ற போல்டருக்கு அனுப்பும். அப்படி இல்லாமல், நீங்கள் விரும்பும் போல்டருக்கு பைல்களை டவுண்லோட் செய்திடும் வகையில் இதனை செட் செய்திடலாம். இதற்கு, ஸ்பேனர் ஐகான் கிளிக் செய்து, Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து ‘Show advanced settings’ என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு கீழாக உள்ள Downloads பிரிவிற்குச் செல்லவும். இங்கு அப்போது மாறா நிலையில் உள்ள போல்டர் காட்டப்படும். இங்கு உள்ள இடச்ணஞ்ஞு பட்டனில் கிளிக் செய்து, நீங்கள் விரும்பும் போல்டரை பிரவுஸ் செய்து தேர்ந்தெடுத்து அமைக்கவும். பின்னர் ஓகே கிளிக் செய்திடவும். இதற்கு மாறாக, ஒவ்வொரு முறையும், பைலின் தன்மைக்கேற்ப, உங்கள் பைல் நீங்கள் குறிப்பிடும் போல்டரில் சேவ் செய்யப்பட வேண்டும் எனில், ‘Ask where to save each file before downloading’ என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதனைத் தேர்ந்தெடுத்து அமைத்தால், ஒவ்வொரு முறை பைல் தரவிறக்கம் செய்திட இருக்கையில், சிறிய விண்டோ ஒன்றைக் காட்டி, எங்கு பைலை சேவ் செய்திட வேண்டும் என்ற கேள்வி கேட்கப்படும். இங்கு கம்ப்யூட்டரில் உள்ள எந்த போல்டரையும் தேர்ந்தெடுத்து சேவ் செய்திடுமாறு அமைக்கலாம். கண்ட்ரோல் அழுத்திக் கொண்டு ஒ கீயை அழுத்தினால், குரோம் பிரவுசரின் டவுண்லோட் மேனேஜர் திறக்கப்படும். இங்கு டவுண்லோட் செய்து கொண்டிருப்பதனைச் சற்று நேரம் நிறுத்தி வைக்கலாம்; ரத்து செய்திடலாம். ஏற்கனவே டவுண்லோட் செய்த பைலை, அங்கு தரப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி, மீண்டும் டவுண்லோட் செய்திடலாம்.



7. கீ போர்ட் ஷார்ட் கட் பயன்பாடு:


வழக்கமாக, எந்த அப்ளிகேஷன் புரோகிராம்களில் இருப்பதைப் போல, குரோம் பிரவுசரிலும் சில ஷார்ட் கட் கீகள் கிடைக்கின்றன. இவற்றில் சிலவற்றை நாம் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, Alt and Home என்ற கீகளை அழுத்தினால், புதிய டேப் ஒன்று திறக்கப்படும். இணைய தளத்தில் ஏதேனும் லிங்க் தரப்பட்டிருந்தால், கண்ட்ரோல் அழுத்தியவாறு அதில் கிளிக் செய்தால், புதிய டேப்பில், அந்த தளம் திறக்கப்படும். Control, Shift and T கீகளை அழுத்தினால், இறுதியாக மூடப்பட்ட இணைய தளம் திறக்கப்படும். மீண்டும் இதே கீகளை அழுத்த, அதற்கு முன்னர் மூடப்பட்ட தளம் திறக்கப்படும். Control, Shift and N கீகளை அழுத்தினால், நம் பிரவுசிங் அறியப்படாத வகையில், பின்பற்றக்கூடாத வகையில் (Incognito window) இணையத்தில் செல்ல ஒரு விண்டோ திறக்கப்படும். இதனைத்தான் பிரைவேட் பிரவுசிங் என்று கூறுகிறோம். Control, Shift and Delete என்ற கீகளை அழுத்தினால், நம்முடைய பிரவுசிங் ஹிஸ்டரி அழிக்கப்படும். அனைத்து ஷார்ட் கட் கீ தொகுப்புகளையும், அவற்றின் பயன்பாடுகளையும் அறிய https:// support.google.com/chrome/bin/answer.py?hl=en&answer=157179என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும்.



8. தங்க நிறத்தில் க்ரோன் ஐகான்:


குரோம் பிரவுசருக்கான, மாறா நிலையில் உள்ள ஐகான், பல வண்ணங்களில் அமைந்ததாகும். இதனை மாற்றி, தங்க நிறத்திலான குரோம் பிரவுசர் ஐகானையும் அமைத்துக் கொள்ளலாம். இதனைப் பெற, ஸ்டார்ட் அழுத்தி, All Programs என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு கூகுள் குரோம் பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு குரோம் ஐகான் மீது ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் பட்டியலில் Copy என்பதில் கிளிக் செய்திடுக. அடுத்து டெஸ்க்டாப் சென்று, காலியாக உள்ள இடத்தில், பேஸ்ட் செய்திடவும். இந்த புதிய ஐகானில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் ஆப்ஷன்ஸ் கட்டத்தில் ப்ராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும். அடுத்து திறக்கப்படும் டயலாக் பாக்ஸில், ஷார்ட்கட் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து திறக்கும் விண்டோவில், தங்க வண்ணத்தில் உள்ள ஐகானை ஹைலைட் செய்திடவும். அடுத்து இருமுறை ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி குரோம் பிரவுசருக்கான ஐகான் தங்க நிறத்தில் ஜொலிப்பதனைக் காணலாம்.
மேலே தரப்பட்டிருப்பது, அனைவருக்கும் தேவைப்படும் பொதுவான உதவிக் குறிப்புகளே. குரோம் பிரவுசரின் செட்டிங்ஸ் பக்கம் சென்றால், இன்னும் என்னவகையான செயல்பாடுகளை மாற்றி அமைக்கலாம் என்பதனை அறிந்து கொள்ளலாம்.

டிரையல் மென்பொருட்களின் காலக்கெடு தேதியை நீட்டிக்க........








நாம் பெரும்பாலும் சோதனை பதிப்பான மென்பொருட்களை தரவிறக்கி நமது அன்றாட தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டிருப்போம்.ஆனால் சில நாட்களில் அதன் பயன்பாட்டை திருத்தி அசலான மென்பொருளை வாங்குமாறு கேட்கும். இது பெரும்பாலும் 30 நாட்கள் வேலை செய்யக்கூடியதாக இருக்கும்.

ஆனால் அந்த மென்பொருள் உங்களுக்கு தேவைப்பட்டதாக மற்றும் விருப்பபட்டதாக மாறி இருக்கும்.இப்படிப்பட்ட சமயத்தில் அந்த மென்பொருளின் கால அளவை நீட்டிக்க இங்கே கொடுக்கப்பட்டுள்ள மென்பொருளை தரவிறக்கி கணிணியில் பதிந்து கொள்ளவும்.

இந்த மென்பொருளின் மூலம் உங்கள் கணிணியில் உள்ள டிரையல் மென்பொருட்களின் .Exe பைலை தேர்வு செய்து காலக்கெடுவை நீட்டிக்கும் புதிய தேதியினை தேர்வு செய்யுங்கள். பக்கத்திலேயே உங்களுக்கு காலண்டர் கொடுக்கப்பட்டிருப்பதால் தேவைப்படும் கால அளவை எளிதாக நீட்டிக்கலாம்.


இப்படி உருவாக்கிய புதிய மென்பொருளின் பெயரை மாற்றி டெஸ்க்டாப்பில் குறுக்கு வழியாக பதிந்து கொள்ளுங்கள்.இப்போது நீங்கள் தேர்வு செய்து பதிந்த புதிய மென்பொருளின் ஐகானை கிளிக் செய்தால் மென்பொருள் தடையில்லாமல் வேலை செய்யும்.

பெரிய கோப்புகளை இமெயிலில் அனுப்புவது எப்படி?






அனைத்து இமெயில் சேவை வழங்கும் நிறுவனங்களும் (email service provider) இணைப்பு கோப்புகளுக்கான (attachment size) அளவை கட்டுபடுத்தி வைத்துள்ளனர். ஜிமெயிலில் 25MB க்கும் குறைவான அளவுள்ள கோப்புகளை மட்டும் இணைக்க முடியும், மற்ற இமெயில் சேவைகளில் இந்த அளவிற்க்கு கூட முடியாது. பொதுவாக விடியோ கோப்புகள் அல்லது புகைப்படங்களின் தொகுப்புகள் போன்ற ஊடக கோப்புகள் (Media files) தான் பெரிய அளவில் இருக்கும்.

about this ad

WizDrop இதற்கு ஒரு தீர்வாக இருக்கும் என நம்பலாம். WizDrop லிருந்து 100MB அளவுள்ள கோப்புகள் வரை இமெயில் முகவரிக்கோ அல்லது கைபேசிக்கோ அனுப்பலாம். இவ்வாறு wizdrop லிருந்து இமெயில் அனுப்பும் முறையை கீழே காணலாம்.

1. உங்களின் இமெயில் முகவரியை தட்டச்சு செய்யவும்.

2. Browse பொத்தனை அழுத்தி இணைக்க வேண்டிய கோப்பை இணைக்கவும். அனைத்து விதமான விடியோ, ஆடியோ, மற்றும் புகைப்ப்டங்கள் போன்றவற்றையும் இதில் இணைக்க முடியும். ஆனால் இதில் zip format கோப்புறைகளை இணைக்க முடியாது. முன்பே சொன்னதை போல் 100MB அளவுள்ள கோப்புகள் வரை இதில் இணைக்க முடியும்.

உங்கள் கோப்புகள் இணையும் வரை இமெய்லின் subject ஐ தட்டச்சு செய்யலாம். ஆனால் இது இமெயில்க்கு மட்டும் தான். மொபைல் போனில் தெரியாது.

3. உங்கள் கோப்பு அனுப்ப வேண்டிய இமெயில் முகவரி மற்றும் கைபேசி எண் போன்றவற்றை இட்டு, பாதுகாப்பு குறியீட்டை தட்டச்சு செய்யவும்.



4. கடைசியாக, Drop button ஐ அழுத்தவும்.

5. உங்கள் கோப்பு Drop செய்யப்பட்டதாக அறிவிப்பு வரும்.

கிட்டத்தட்ட உடனடியாக, உங்கள் நண்பர்கள் மின்னஞ்சலை, உங்கள் கோப்புகளின் பதிவிறக்க இணைப்புடன் கூடிய இமெயில் அடைந்திருக்கும்.

ஜிமெயில் இவ்வகை மின்னஞ்சல்களை spam உறையினுள் தள்ளிவிடும், எனவே நீங்கள் கோப்புகளை அனுப்பும் முன் பெறுநருக்கு ஒரு தகவலை தெரிவித்துவிடவும். கோப்புகளை பதிவேற்றும் மற்றும் பதிவிறக்கும் வேகங்கள் சாதாரணமாக தான் உள்ளன. ஆனால், இது இப்பொழுது வழக்கத்திலுள்ள மற்றவற்றை விட வேகமாக தான் இருக்கிறது.

ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் Lock செய்வது எப்படி...?





நாம் வீட்டில் இலாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி என்று பார்க்கலாம்.

முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, passwordகொடுத்து Login செய்யுங்கள்.

பிறகு settings தேர்வு செய்து search settings click செய்யுங்கள்.

Safe serrch Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள்,

விபரங்களுக்கு Click here

இங்கே கிளிக் செய்யவும்.

அடுத்து Safe SearchFiltering கீழே உள்ள Lock safe search கிளிக் செய்துகொள்ளுங்கள்.

Locking Process நடைபெறும்.

பிறகு Safe search Locked என்று தோன்றும் சரியாக Lock ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock safe search கொடுங்கள்.

அவ்வளவுதான் இனி ஆபாசம் சம்மந்தமான எந்த தகவலும் உங்கள் குழந்தைகளுக்கு Google வழங்காது.

இதன் பிறகு google search பக்கத்தில் நீங்கள் Lock செய்தான் அடையாளமாக வண்ண பந்துகள் அடையாளமாக தோன்றும் .

நீங்கள் இதனை Unlock செய்ய மீண்டும் Search setting சென்று unlock என்று மாற்றிவிடுங்கள்.

googleஎவ்வளவு பாதுகாப்பானது பாருங்கள்...!

மென்பொருள் சீரியல் கூகுள் ட்ரிக் software serial






ஏதாவது ஒரு மென்பொருள்(software) serial சீரியல் நம்பர் வேண்டும்போது. கூகுள் ட்ரிக் உதவும்.
google search'ல நீங்க தேடும் software பெயருடன் "94fbr" சேர்த்து தேடினால்
உங்களுக்கு தேவையான சீரியல் நம்பர்எளிதில் கிடைக்கும்.
உதாரணமாக : nero94fbr, photoshopcs5 94fbr,etc....


உங்கள் கணினியின் Internet இணைப்பை வேறு Mobile அல்லது கணினிகளுக்கு Wifi மூலமாக பகிர்வது எப்படி?

















Igi rizvi 6:33 AM Computer Tipsஇணையம்தொழில்நுட்பம்


நீங்கள் உங்களது கணினியில் Internet இணைப்பை பயன்படுத்த Wifi, LAN, Cable Modem, Dial-up, Cellular,USB Dongle போன்றவற்றில் எதாவது ஒன்றை பயன்படுத்துவீர்கள் இதனை எந்தவொரு Router-உம் இல்லாமல்
உங்கள் கணினியில் இருந்தவாறே Wireless பயன்படுத்தக்கூடிய Laptop, Smart Phone, iPod Touch, iPhone, Android Phone, Netbook, போன்றவற்றுக்கு Wireless மூலம் இணைப்பை பகிர்வதற்கு Virtual Router எனும் சிறந்த மென்பொருள் பயன்படுகிறது.

Virtual Router மென்பொருளை பயன்படுத்துவதற்கு உங்கள் கணினியின் Operating System Windows 7 ஆக இருக்கவேண்டும் மற்றும் உங்கள் கணினி Wireless பயன்படுத்தக்கூடியதாக இருக்கவேண்டும். Laptop கணினிகளில் Wireless சேவை இணைந்தேதான் வருகிறது Desktop கணினி என்றால் Wireless Device தனியாக போட்டிருக்கவேண்டும்





சரி இதனை டவுன்லோட் செய்து எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்ப்போம்
1.முதலில் இங்கு சென்று Virtual Router என்ற மென்பொருளை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் Install செய்து கொள்ளவும்.

2.Installசெய்த Virtual Router மென்பொருளை Open செய்து கொள்ளவும் பின்பு கீழே படத்தில் உள்ளவாறு வரும்
அதில் Network Name (SSID) என்பதில் உங்களுக்கு விரும்பிய ஒரு பெயரை கொடுக்கவும்

Password என்பதிலும் உங்களுக்கு விரும்பிய ஒரு Password -ஐ கொடுத்து Start Virtual Router என்பதை கிளிக் செய்யவும்.



3.இப்பொழுது உங்கள் கணினியில் இருந்து நீங்கள் கொடுத்த Network பெயரில் Wireless இணைப்பு பகிரப்படும். இதனை வேறு கணினி அல்லது Mobile Phone -களுக்கு பயன்படுத்தவேண்டும்மென்றால் நீங்கள் கொடுத்த Password ஐ கொடுத்து இணைப்பை இணைத்துக்கொள்ளலாம்.

பாஸ்வேர்ட் இல்லாமல் உங்கள் ஜிமெயில் கணக்கை மற்றவர்கள் பயன்படுத்தலாம்!!






ஜிமெயில் ஆனது ஒரு வெறும் மெயில் அனுப்புதல், பெறுதல் என்ற வசதிகளை தாண்டியும் நிறைய வசதிகளை தருகிறது. சில நேரங்களில் ஒரு நிறுவனம், அமைப்பு போன்றவற்றுக்கு ஜிமெயில் மூலம் மின்னஞ்சல் கணக்கு வைத்திருக்கும் போது அதை ஒருவர் மட்டும் கண்காணிக்க முடியாத நிலை வரலாம்.

அப்போது இன்னும் பலருக்கு கணக்கின் பாஸ்வேர்ட் போன்றவற்றை தந்தால் தான் அவர்கள் பயன்படுத்த முடியும். ஆனால் அது பாதுகாப்பு இல்லை என்று சிலர் நினைப்பது உண்டு. இதுவே பாஸ்வேர்ட் எதுவும் கொடுக்காமல் குறிப்பிட்ட சிலர் உங்கள் கணக்கை Access செய்ய அனுமதி கொடுத்தால் நன்றாக இருக்கும் அல்லவா?

இதை ஜிமெயில் மூலம் செய்ய முடியும். இதன் மிகப் பெரிய பலன் நீங்கள் Access கொடுக்கும் நபருக்கு உங்கள் கணக்கின் பாஸ்வேர்ட் தெரியாது. செட்டிங்க்ஸ் எதையும் மாற்ற இயலாது, சாட் செய்ய இயலாது. மாறாக அந்த கணக்கிற்கு வரும் மின்னஞ்சல்களை படிக்க முடியும், படித்ததை நீக்க முடியும். உங்கள் கணக்கில் இருந்து மின்னஞ்சல் அனுப்ப முடியும். இதை செய்வது எப்படி என்று பார்ப்போம்.

முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். Settings பகுதிக்கு வரவும்.வரும் பகுதியில் "Accounts and Import" என்பதை கிளிக் செய்யுங்கள். அதில் "Grant access to your account" என்பதற்கு வரவும். அதில் "Add another account" என்பதை கிளிக் செய்யுங்கள்.

இப்போது ஒரு புதிய விண்டோ ஓபன் ஆகி மின்னஞ்சல் முகவரி கேட்கும். யாருக்கு Access தருகிறீர்களோ அவர் மின்னஞ்சல் முகவரி தந்து விடவும். அடுத்த பக்கத்தில் "Send Email to Grand Access" என்பதை கொடுத்து விடவும்.

இப்போது உங்கள் நண்பரிடம் சொல்லி அவருக்கு வந்துள்ள மின்னஞ்சலை Accept செய்ய சொல்ல வேண்டும்.

இதை கிளிக் செய்த அரை மணி நேரத்தில் Access வசதி கிடைத்து விடும். Access பெற்ற நபர், அவர் மின்னஞ்சல் கணக்கில் நுழைந்து வலது மேல் மூலையில் அவர் பெயர் மீது கிளிக் செய்தால் அதற்கு கீழே Access பெற்ற மின்னஞ்சல் கணக்குக்கு செல்வதற்கான வழி இருக்கும்.

இதில் இரண்டாவதாக மின்னஞ்சல் முகவரி உடன் Delegated என்று உள்ளது தான் Access கிடைத்துள்ள மின்னஞ்சல் முகவரி. இதை கிளிக் செய்தால் அவர் உங்கள் மின்னஞ்சல் கணக்கில் நுழைந்து விடலாம். பாஸ்வேர்ட் தேவை இல்லை.

உங்கள் கணக்கில் இருந்து அவர் மின்னஞ்சல் அனுப்பும் போது, அதை பெறுபவருக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரி உடன், அவரது மின்னஞ்சல் முவரியும் சேர்ந்து செல்லும்.

மேலே படத்தில் From, Sent By என்று இரு பகுதிகள் இருப்பதை காணலாம். இதன் மூலம் அவர் மின்னஞ்சல் கணக்கை தவறாக கையாள முடியாது.

இதில் ஜிமெயில் கணக்கு உள்ள இன்னொரு நண்பரை மட்டுமே சேர்க்க முடியும். யாஹூ, ஹாட்மெயில் மற்றும் இதர எதையும் பயன்படுத்தும் நண்பர்களையும் சேர்க்க முடியாது.

இப்போது உங்கள் மின்னஞ்சல் கணக்கில் "You have granted access to your account toxxxxxxx @gmail.com. This notice will end in 7 days." என்று இருக்கும்.

இணைய இணைப்பு இல்லாமலே Gmail ஐ பயன்படுத்தனுமா?



ஏதாவது ஒரு நேரத்தில் நமக்கு ஏதேனும் முக்கியமான மின்னஞ்சல் வந்துள்ளதா என சோதிக்க வேண்டும் அல்லது யாருக்கேனும் முக்கிமாக ஒரு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்.



சரியாக அந்த நேரம் பார்த்து நம்முடைய கணணியில் இணைய இணைப்பு துண்டிக்கபட்டிருக்கும் அல்லது நாம் வேறு எங்காவது வெளியில் இருப்போம் மடிக்கணணியில் இணைய இணைப்பு இருக்காது. அது போன்ற சமயங்களில் நமக்கு உதவி செய்யவே கூகுள் ஒரு அருமையான வசதியை வெளியிட்டுள்ளது.



ஆப்லைனில் நம்முடைய ஜிமெயிலுக்கு வந்துள்ள மின்னஞ்சலை பார்க்கலாம் மற்றும் நாம் மற்றவர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பலாம் மற்றும் ஆன்லைனில் செய்யும் அனைத்து வேலைகளையும் நாம் இன்டர்நெட் இணைப்பு இல்லாமலே செய்யலாம்.



இதற்கு நீங்கள் கூகுள் குரோம் உலவியை பயன்படுத்த வேண்டும். அடுத்து இந்த லிங்கில் Offline Google Mail சென்று நீட்சியை உங்கள் உலவியில் இன்ஸ்டால் செய்யுங்கள்.



www.chrome.google.com



இந்த நீட்சியை உங்கள் உலவியில் இணைத்தவுடன் ஒரு புதிய டேப்(tab) உருவாகும் அல்லது நீங்களே ஒரு New tab உருவாக்குங்கள்.



இப்பொழுது புதிய டேபில் நீங்கள் தற்பொழுது இணைத்த Offline Google Mail ஐகானும் இருக்கும் அதில் கிளிக் செய்யுங்கள்.



உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் Allow OfflineMailஎன்பதை தேர்வு செய்யவும்.இந்த விண்டோவில்கீழே பகுதியில் உங்களின் மின்னஞ்சல் ஐடி காட்டும் அதில் எந்த ஐடிக்கு நீங்கள் னில் பார்க்க வேண்டுமோ அதை தேர்வு செய்து கொண்டு Continue பட்டனை அழுத்துங்கள்.



அவ்வளவு தான் Continue அழுத்தியவுடன் உங்களின் மின்னஞ்சல் திறக்கும் அந்த ஐடிக்கு வந்த அனைத்து மின்னஞ்சல்களும் காட்டும்.



இதில் உங்கள் இன்பாக்ஸில் உள்ள அனைத்து மின்னஞ்சல்களும் காட்டும். அந்த மின்னஞ்சலுக்கு நீங்கள் Reply போடலாம் அல்லது அந்த மின்னஞ்சலை அப்படியே Forward செய்யலாம் அல்லது புதியதாக நீங்களே ஒரு மின்னஞ்சலை Compose பட்டனை அழுத்தி அனுப்பலாம் மற்றும் ஏதாவது ஒரு பைலை attachment செய்து அனுப்பும் வசதியும் உள்ளது அனைத்தும் இணைய இணைப்பு இல்லாமலே.





மேலும் ஓன்லைனில் உள்ள Move, Label, Mute, Report Spam,Print,Mark as Read போன்ற இதர முக்கியமான வசதிகளும் நீங்கள் ஆப்லைனில் பயன்படுத்தி கொள்ளுங்கள். மேலும் Menu பட்டனை அழுத்தினால் இன்னும் பல வசதிகள் உள்ளது. இதன் மூலம் Chat History கூட பார்த்து கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு. இவ்வாறு ஒட்டுமொத்த வசதிகளையும் நாம் இணைய இணைப்பு இல்லாமேலே பயன்படுத்தி கொள்ளலாம்.

வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைன் மூலம் பெற


வாக்காளர் அடையாள அட்டையை  ஆன்லைன் மூலம் பெற
கீழே உள்ள இணையதள முகவரிக்கு சென்று உங்களுடைய கைபேசி எண் மற்றும் உங்களது மின் அஞ்சல் முகவரி கொடுக்கவும். உங்களுடைய கைபேசிக்கு "verification code" மெசேஜ் வரும். அதனை இணையதளத்தில் கொடுப்பதன் மூலம் ஒரு கோரிக்கை படிவம் வரும் அதில் கேட்கப்பட்டுள்ள விபரங்களை கொடுத்த பின்னர் save என்பதை கிளிக் செய்தவுடன் உங்களுடைய கைபேசிக்கு confirmation மெசேஜ் வரும். இனி நீங்கள் "online application" என்பதை கிளிக் செய்து விபரங்களை கொடுத்த பின்னர் உங்களுடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு தேர்தல் அதிகாரி உங்களுடைய இல்லத்திற்கு வருகை தந்து சரிபார்த்து அனைத்தும் சரியாக இருக்கும் பட்ச்சத்தில் உங்களுடைய விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டு சில நாட்களில் உங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்
அல்லது

Useful Information








Here's a way to keep your Facebook account still safe if you forgot to logout due to a power shortage/blackout or if you are using a public computer (internet cafe).

Try this method:
Steps:
1. Log in to Facebook from your own computer.
2. Click `Account Settings` and then click `Security`
3. Click `Edit` button near to `Active Sessions`.
4. You can see the Active Sessions , End all Sessions by clicking `End Activity`.
5. Voila! You're currently logged-in account on a public computer is now logged-out.

Friday, 4 July 2014

Facebook free call....

Facebook has started awesome free call facility in Facebook messenger.....
Condition is this that you should have android phone and active data connection......

how to make free call....
Step 1-open messenger
step 2-click the contact
step 3- Goto option
step 4- Free call
now Enjoy....................

Email Privacy Tips For Users !!!!!




To maintain privacy of your Email and to Protect your Email ID from being Hacked we must follow some basic steps as follows,




1. Enable two step verification in you Email accounts.
2. Enable Login-notification for you email and get notification in your mobile whenever you login.
3. Set a strong password with a mix of alphabets, numbers and special characters.
4. Enable login- notification for you Facebook accounts to prevent unauthorized access.
5. Enable HTTPS in your email settings and your Facebook account settings.
6. Never share your password with anyone. Even to your closest person.
7. Setup a recovery question which is difficult to answer and never setup an easy & guessable answer to your security question.
8. Never click on any links sent through mail or chat. It may be a link which can steal your cookie or inject any viruses.
9. Always check your address bar for proper website address before logging in.
10. Whenever you Need to Forward an Email to More than One Person use the BCC Option to Write Addresses.
11. If you are Unable to Access Your Email Account Immediately Report it to the Service Provider. They Give You a Option of Forgot Password/Account Hacked etc.
12. Avoid Using FREE WIFI Access At Public Places.

Reasons Your Facebook Account Will Be Disabled ....








1.You didn't use your real name. Facebook will find you and spit you out.
2.You joined too many groups. (The maximum limit is 200 groups per user.)
3.You posted too many messages on a wall or in a group. E.g. Guy Kawasaki had his account disabled–in his case for “excessive evangelism.”
4.You posted in too many groups, too many user’s walls. (That’s what spammers do, silly.)
5.You friend too many people. (Not so long ago this was a prime cause of disabled accounts, but Facebook has instituted a maximum of 5000 friends that should protect you from yourself.)
6.Your school/organization affiliation is doubtful.
7.You’re poking too many people. (Beware the odd FB app that pokes on your behalf.)
8.You advertised your app on wall posts.
9.You used duplicate text in multiple messages.
10.You are a cow, dog, or library.
11.You are under 18 years old and not part of a High School group.
12.You wrote offensive content.
13 You scraped information off Facebook. E.g. Facebook bots disabled Robert Scoble’s account.
Here are more possible reasons your account may be deactivated:
You send “too many” friend requests in one day/session.
You make “too many” wall posts in one day/session – especially with verbatim content and with links.
You copy and paste the same friend request message “too many” times.
You send too many identical emails to individual friends and/or friend lists*.
You message your Group members “too many” times.
You message your Event invitees “too many” times.
Recommended Action Steps:
Take your time to build up a strategic network of friends on Facebook.
Focus on quality, not quantity.
Send no more than approximately 20 new friend requests at any one time. Also, be sure to mix up the friend request messages.
Use your own opt-in email system.

How To UNLOCK USB Dongle Internet Modem


















வேறு ஒரு நிறுவனத்துடைய SIM யை இன்னொரு usb Dongle இல் போட்டாஇன்டர்னெட்டை பையன் படுத்துவது எப்படி?( How to UNLOCK USB dongle Internet Modem and swap another service simcard )




(Airtel, Reliance ,Docomo, Mts,vodafone, Idea & BSNL) Dongle


நாம் பயன் படுத்தும் இணையச்சேவை வழங்குனர்களின் (Airtel, Reliance ,Docomo, Mts,vodafone, Idea & BSNL) Dongle இதை நாம் வாங்கினால் அவர்களுடைய SIM யை தவிர வேறு எந்த SIM யையும் உபயோகிக்க‌ இயலாதவாறு தடுத்து வைத்து இருப்பார்கள்.


நாம் வேறு ஒரு நிறுவனத்துடைய SIM யை இன்னொரு Dongle இல் போட்டால் Unlock Code கேட்கும்.அதில் சரியான Code யை நாம் கொடுத்து விட்டால் அந்த Dongle , Unlock செய்யப்பட்டு விடும்.சரி இந்த Unlock Code யை எப்படி கண்டுபிடிப்பது?


முதலில் உங்களுடைய Dongle இன் 15 இலக்கத்தை கொண்ட IMEI Number ஐ கண்டுபிடியுங்கள்.இது Dongle இன் பின் புறத்தில் காணப்படும். இதை அப்படியே Copy செய்து இந்த தளம் சென்று


huawei Dongle எனில் இந்த http://www.wintechmobiles.com/tools/huawei-code-calculator/ தளத்திற்கும்


அல்லது


ZTE டாங்களே எனில் இந்த http://www.wintechmobiles.com/tools/zte-unlock-code-calculator/ தளத்திற்கு சென்று


உங்களுடைய DONGLEஇன் IMEI கொடுத்து CALCULATE CODES கொடுக்கவும்.


இப்போது உங்களுடைய Dongle க்குறிய Unlock Code கிடைக்கும். அதை அப்படியே Copy செய்து விட்டு, வேறு ஒரு நிறுவனத்துடைய SIM இனை Dongle லில் போடுங்கள்.உங்களிடம் Unlock Code திரும்பவும் கேட்கும், அந்த இடத்தில் Paste செய்து கொள்ளுங்கள் Unlock ஆகிவிடும். சிம்பிள் அவ்வளவுதான்.


பெரும்பாலனோர் இது வரை ஒரு முறை சரீஸ் டிஸ்கனெக்ட் செய்யப்பட்டால் அந்த டாங்கிலை காட்சி பொருளாகத்தான் வைத்திருப்பர்.


இனி (Airtel, Reliance ,Docomo, Mts,vodafone, Idea & BSNL) Dongle எதை வேண்டுமானாலும் உபயோகிக்க‌ முடியும்..