Monday 4 August 2014

How to Hack(Change Other System password)



How to Hack(Change Other System password) or Reset Your Forgotten Password In Windows.
Just Follow it :-

REQUIREMENTS :
1. Windows Installation Disk.
2. A simple Command Line.

Follow Below Simple Steps :

Step 1: Insert Your windows disk And Boot Your Pc.

Step 2: Select " Repair Your Computer " From the lover Left Corner. Check the below Pic.

Step 3: Follow on Till you get the below screen , You need to click on Command Promt.

Step 4: Now The Real Trick,Type The below Command to backup the original Sticky keys File.
copy c:\windows\system32\sethc.exe c:\

Step 5: Now Copy The Command Prompt Executable on top of the sticky keys executable :

copy c:\windows\system32\cmd.exe c:\windows\system32\sethc.exe

Step 6: Now Reboot Your PC.

Step 7: After Rebooting your pc, You will see a login Screen, All You need to do is Hit Shift Key 5 Times, You will get a Command Promt.

Step 8 : Now to Reset Your Password just replace The Username and passoword with your own In Below line.

net user Freak MyNewPassword

Thats all Now you can Login.

you probably want to put the original sethc.exe file Back, Then You have to just reboot into the installation CD, Open the Command Promt Again and Copy The c:\sethc.exe file back to
c:\windows\system32\sethc.exe.

Enjoy, Keep Learning.

Sunday 6 July 2014

ADMINISTRATOR ACCOUNT





உண்மையான முழு அதிகாரம் பெற்ற ADMINISTRATOR ACCOUNT பெறுவது எப்படி?-அனைவருக்கும் தேவை

ஒவ்வொரு நாளும் நமது கணினி புது விதமான ஆபத்தான சூழ்நிலைகளை எதிரிக்கொள்கிறது. தீர்வு தெரிந்த சிலர் அதை சரி செய்து கொள்கின்றனர், ஆனால் பலர் பிறரை நாடுகின்றனர் ஆதற்கு ஒரு தொகையை வேறு தருகின்றனர். இதை தவிப்பதற்காகவே இந்த பதிவு. பெரும்பாலும் அனைவரது கணினியிலும் ஏற்பட கூடிய ஓர் சிக்கலை தான் நாம் பார்க்க போகிறோம்.

ADMINISTRATIVE அக்கொண்ட் என்றால் என்ன?தெரியாதவர்கள் தெரிந்துக்கொள்ளுங்கள். ADMINISTRATIVE அக்கொண்ட் என்பது அனைத்து விதமான USER ACCOUNTS, STANDARD ACCOUNTS, GUEST அக்கொண்டிர்க்கும் தலைவர் என்பதை போலா. நம் கணினியில் அனைத்து விதமான செயலுக்கும் அனுமதி உள்ள ஓர் அக்கொண்ட் பெயர் தான் ADMINISTRATIVE ACCOUNT . இவரை கொண்டு தான் நாம் மற்ற USER ACCOUNTகளை கையாளுகிறோம். அனைத்து விதமான PERMISSION பெற்றது இந்த ADMINISTRATIVE அக்கொண்ட்.

ஓர் USER ACCOUNTக்கு சரியான அனுமதி இல்லையென்றால் மேற்குரிய படத்தில் காட்ட பட்டாற் போல தான் பிழை செய்தி கிடைக்கும். இந்த செயலை மேற்கொள்ள வேண்டும் என்றால் கண்டிப்பாக ADMINISTRATIVE அக்கொண்ட்யை கொண்டு தான் மேற்கொள்ள முடியும்.

பொதுவாக அனைவரும் ADMINISTRATIVE அக்கொண்டை அடிபடையாக கொண்ட ஓரு அக்கொண்டை தான் பயன்படுத்துவிர்கள். இதுவும் ADMINISTRATIVE அக்கொண்ட் தான். ஆனால் சில சமயங்களில் தங்களின் இந்த அக்கொண்ட் கூட காலவாரும். அப்படினா!!!! விண்டோஸ் ஆப்ரேட்ங் சிஸ்டம் உண்மையான் ADMINISTRATIVE அக்கொண்டை மறைத்து வைத்து உள்ளது. தாங்கள் பயன்படுத்தும் இந்த ADMINISTRATIVE அக்கொண்டை முழுமையானது அல்ல. உண்மையான ADMINISTRATIVE அக்கொண்டை தாங்கள் காண வேண்டும் என்றால் SAVEMODE சென்றால் மட்டுமே காண இயலும் பயன்படுத்த முடியும். இந்த முழு அதிகாரம் பெற்ற ADMINISTRATIVE அக்கொண்டை NORMAL LOG SCREENண்யில் பெறுவது எவ்வாறு என்பதை தான் நாம் பார்க்க இருக்கிறோம் நண்பர்களே.

பின் வரும் படி தாங்கள் செயல் மேற்கொண்டால் FULL RIGHTS ADMINISTRATIVE அக்கொண்டை தங்களின் லாகன் திறையில் தோன்றும் படி செய்யலாம். மேலும் தங்களின் கணினியின் முழு அதிகாரம் பெற்ற ஓர் உரிமையாளராக தாங்கள் தோன்றலாம்.

முதலின் இங்கு கீழே தரப்பட்டுள்ள லிங்க்யை கிளிக் செய்து ADMINISTRATIVE ACTIVATE.BAT என்னும் பைலை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். பின்னர் அதை RIGHT CLICK செய்து RUN BY ADMINISTRATOR என்பதை கிளிக் செய்யவும். பின்னர் தங்களின் கணினியை LOG OFF செய்யவும். இப்போது ADMINISTRATIVE அக்கொண்டிற்கான LOG ON பட்டன் இருக்கும். உதவிக்கு கீழே படம்.

SAVEMODE என்றால் என்ன என்பதையும், அதன் முக்கியமான பணிகளை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

குரோம் பிரவுசர் செட்டிங்ஸ்










பிரவுசர் பயன்பாட்டில், குரோம் பிரவுசர் தொடர்ந்து தன் பயனாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருக்கு இணையாக இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. மொத்த பயனாளர்களில், இரண்டும் 30 சதவீதத்திற்கும் மேலான பங்கினைக் கொண்டிருக்கின்றன.
குரோம் பிரவுசரின் தொடர்ந்த பரவலுக்குக் காரணங்களாக நாம் பல சிறப்புகளைக் கூறலாம். இதன் வேகத்திற்கு அடுத்தபடியாக, இணைய தளம் மற்றும் தேடலுக்கென ஒரே விண்டோ இயக்கம் பலரைக் கவர்ந்துள்ளது. தேடலுக்கென தனியே விண்டோவினை நாம் இதில் தேட வேண்டியதில்லை. இந்த அமைப்பிலேயே நாம் இன்னும் சிலவற்றை நம் விருப்பப்படி அமைத்திடலாம். அதன் மூலம் நாம் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தி, விரைவாக பிரவுசரைச் செயல்பட வைத்திடலாம். அவற்றை இங்கு பார்க்கலாம்.


1. பக்கங்களை எளிதாக படிக்க:


குரோம் பிரவுசர் காட்டும் இணைய தளப்பக்கங்களின் டெக்ஸ்ட் மற்றும் படங்களை நாம் விரும்பும் அளவில், காண்பதற்குத் தெளிவாக இருக்கும் வகையில் அமைத்திடலாம். கண்ட்ரோல் (Ctrl) கீயினை அழுத்திக் கொண்டு, மவுஸின் வீலை முன்புறமாக நகர்த்தினால், இவை பெரிதாகவும், பின்புறமாக சுழற்றினால், சிறியதாகவும் மாறும். நம் தேவைக்கேற்ப இதனை அமைத்து நிறுத்தலாம். உங்களுடைய மவுஸில் ஸ்குரோல் வீல் இல்லை என்றால், பிரவுசரின் மேல் வலது மூலையில் உள்ள ஸ்பானர் படத்தில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் ஸூம் செட்டிங்ஸில் + மற்றும் - பட்டன்களை அழுத்தி இதனை அமைக்கலாம்.
அனைத்து இணைய தளங்களுக்குமான எழுத்தின் அளவையும் இந்த வகையில் அமைத்திடலாம். ஸ்பானர் ஐகானில் கிளிக் செய்து, Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். தொடர்ந்து ‘Show advanced settings’ என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர் கீழாகச் சென்று, Web content என்ற பிரிவினை அடையவும். இங்கு எழுத்தின் அளவை அமைத்திட Large or Very Large என இரு ஆப்ஷன்ஸ் கிடைக்கும். இதனைப் பயன்படுத்தி, அனைத்து இணைய தளங்களிலும் டெக்ஸ்ட் காட்டப்படும் அளவினை அமைக்கலாம்.
மற்ற பிரவுசர்களில் உள்ளது போலவே, குரோம் பிரவுசரிலும், எப்11 கீ அழுத்தி, மானிட்டர் திரை முழுவதும், இணைய தளம் தோன்றும் வகையில் அமைக்கலாம்.



2. செட்டிங்ஸ் அமைப்பு எங்கும் கிடைக்க:


பிரவுசரில் அமைத்த அமைப்புகள், நாம் அமைத்த கம்ப்யூட்டரில் மட்டுமே கிடைக்கும். மற்ற கம்ப்யூட்டர்களிலும் இவற்றை அமைக்க குரோம் பிரவுசர் வசதி செய்துள்ளது. இதன் மூலம் பிரவுசர் செட்டிங்ஸ் மட்டுமின்றி, நம் தேவைக்கான அமைப்புகள், புக்மார்க்ஸ் அப்ளிகேஷன் ஆகியவற்றையும் கிளவ்ட் கம்ப்யூட்டிங் வகையில் இணைத்து சேவ் செய்திடலாம். இதற்கு, முதலில் உங்கள் கூகுள் அக்கவுண்ட் மூலம் உள்ளே செல்லவும். உங்களுக்கு அக்கவுண்ட் இல்லை என்றால், ஒன்றை உருவாக்கவும். இதன் மூலம் கூகுள் தளத்தில் நுழைந்தவுடன், ஸ்பேனர் ஐகானில் கிளிக் செய்திடவும். பின்னர் Sign in என்ற பிரிவில் Settings பகுதியைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு ‘Advanced sync settings’ என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இதில் எந்த செட்டிங்ஸ் எல்லாம், கிளவ்ட் கம்ப்யூட்டிங் வகையில் இணைக்க வேண்டுமோ, அவற்றை எல்லாம், தேர்ந்தெடுக்கவும். மாறா நிலையில், குரோம் உங்களுடைய அனைத்து செட்டிங்ஸ் அமைப்புகளை யும் இணைக்கிறது. இது போன்ற வேலைகளை, பொதுவான கம்ப்யூட்டர் மையத்தில் உள்ள கம்ப்யூட்டர்களில் அல்லது மற்றவர்களும் பயன்படுத்தக் கூடிய கம்ப்யூட்டர்களில் செய்திட வேண்டாம். இதனால், உங்கள் செட்டிங்ஸ்களை மற்றவர்கள் அறிந்து மாற்றிக் கொள்ள வழி வகுக்கும். இதனை ஏற்படுத்திய பின்னர், நீங்கள் எந்தக் கம்ப்யூட்டரில் லாக் இன் செய்தாலும், குரோம் பிரவுசரில் அமைக்கப்பட்ட அனைத்து செட்டிங்ஸ் அமைப்பும் கிடைக்கும்.



3. தொடக்க நிலை தேவைகள்:


மாறா நிலையில், குரோம் பிரவுசரில் விண்டோ ஒன்று திறக்கப்படுகையில், பிரவுசர் புதிய டேப் (New Tab) பக்கத்தினைக் காட்டும். இது காலியாக உள்ள பகுதி. இதில் நீங்கள் அடிக்கடி சென்று பார்த்த இணையதளங்களின் முகப்பு பக்கங்களின் படங்கள் இருக்கும். இதனையும் உங்கள் விருப்பப்படி அமைக்கலாம். ஸ்பேனர் ஐகான் கிளிக் செய்து, Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து On startup என்ற பிரிவிற்குச் செல்லவும். இங்கு ‘Open a specific page or set of pages’ என்ற ரேடியோ பட்டனில் கிளிக் செய்திடவும். தொடர்ந்து அடுத்து உள்ள Set pages என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். இதனை அடுத்து ‘Use current pages’ என்பதில் கிளிக் செய்திடலாம். அல்லது மாறாக, நீங்கள் விரும்பும் இணையதளத்தினை ஹோம்பேஜாக மாற்ற, அந்த இணைய தளத்தின் முகவரியை டைப் செய்திடலாம். இங்கு, ஒன்றுக்கு மேற்பட்ட இணைய தளங்களின் முகவரிகளையும் டைப் செய்து அமைக்கலாம். பிரவுசர் திறக்கப்படும் போது, இவை அனைத்தும், ஒவ்வொரு டேப்பில் திறக்கப்படும். இங்கு இன்னொரு ஆப்ஷனையும் பார்க்கலாம். நீங்கள் இறுதியாகப் பார்த்த இணைய தளங்களையே பெற்று, தொடர்ந்து பணியாற்ற விரும்பினால், ‘Continue where I left off’ என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கலாம்.



4. பிரச்னைகளை கண்டறியும் வழிகள்:


குரோம் பிரவுசர் இயக்கத்தில் பிரச்னைகள் ஏற்படுகையில், அவற்றைத் தீர்க்கவும் சரி செய்திடவும் பல வழிகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, ‘about’ என்ற கட்டளைச் சொல்லைப் பயன்படுத்தி, பிரவுசரின் வெவ்வேறு பகுதிகளில் என்ன நடக்கிறது என்பதனை அறியலாம். எடுத்துக்காட்டாக, about:memory என இணைய முகவரிக்கான கட்டத்தில் டைப் செய்து என்டர் செய்தால், பிரவுசர், இணைய தளப் பக்கங்கள், ப்ளக் இன் புரோகிராம்கள் ஆகியவை மெமரியில் எவ்வளவு இடத்தை எடுத்துக் கொண்டு இயங்கி வருகின்றன என்று காட்டப்படும். இதே போன்ற தகவல்களை, இணையதளத்தினைப் பார்வையிடுகையில், ஷிப்ட் கீ அழுத்தி எஸ்கேப் கீ (Esc) அழுத்தினாலும் கிடைக்கும். இங்கு குரோம் பிரவுசருக்கான டாஸ்க் மானேஜர் டயலாக் பாக்ஸ் விண்டோ திறக்கப்பட்டு இந்த தகவல்கள் காட்டப்படும். இதற்கு மாறாக about:plugins என டைப் செய்தால், ப்ளக் இன் புரோகிராம்கள் மட்டும் எடுத்துக் கொண்ட மெமரி பற்றிய தகவல்கள் கிடைக்கும். இதன் மூலம் பிரச்னைக்குரிய ப்ளக் இன் புரோகிராம்களை நாம் கண்டறிந்து நீக்கிவிடலாம்.



5. மின்னல் வேக கணக்கீடுகள்:


குரோம் பிரவுசரைப் பயன்படுத்தி, நாம் கணக்கிட வேண்டியவற்றை, மிக வேகமாகச் செயல்படுத்தலாம். மற்ற பிரவுசர்கள் மூலம் இணையத்தில் இருக்கையில், இந்த கணக்கிடும் செயல்பாட்டினை, கூகுள் வெப்சைட் சென்று மேற்கொள்ள வேண்டியதிருக்கும். குரோம் பிரவுசரில், இவற்றை பிரவுசரிலேயே மேற்கொள்ளலாம். நீங்கள் மேற்கொள்ள விரும்பும் கணக்குகளை அட்ரஸ் பாரிலேயே டைப் செய்திடுங்கள். கணக்குகளை வழக்கமான /, *, + மற்றும் வகுத்தல், பெருக்கல், கூட்டல் மற்றும் கழித்தல் அடையாளங்களுடன் அமைத்திடுங்கள். அமைத்துவிட்டு, என்டர் பட்டன் தட்டினால், குரோம் உங்களுக்கான கணக்கினை மேற்கொண்டு, தட்டிய வேகத்தில் விடையைத் தரும். இந்த கணக்கின் முடிவு, 32 பட்டன் அமைந்த பிரவுசரின் உள்ளாக அமைந்த கால்குலேட்டரில் காட்டப்படும். வழக்கமான சயின்டிபிக் கால்குலேட்டர் போலத் தோற்றத்தில் இது காட்டப்படும். இன்னும் உங்களுக்கு சில வேடிக்கை வேண்டுமெனில், கூகுள் சர்ச் பாக்ஸில் உள்ள மைக்ரோ போன் ஐகானில் கிளிக் செய்திடவும். இதன் பின்னர், நீங்கள் மேற்கொள்ள விரும்பும் கணக்குகளை, குரல் மூலமாகவே அமைத்துச் செயல்படுத்தலாம். இதற்கென மைக் ஒன்று இணைக்கப்பட வேண்டும். லேப்டாப் கம்ப்யூட்டரில் மைக் இருப்பதால், இணைக்க வேண்டிய அவசியமில்லை.



6. டவுண்லோட் போல்டர் மாற்ற:


குரோம் பிரவுசர் வழியாக, இணைய தளத்திலிருந்து ஏதேனும் ஒரு பைலை தரவிறக்கம் செய்திடுகை யில், அது பைலை, மை டாகுமெண்ட்ஸ் போல்டருக்குள்ளாக உள்ள டவுண்லோட்ஸ் என்ற போல்டருக்கு அனுப்பும். அப்படி இல்லாமல், நீங்கள் விரும்பும் போல்டருக்கு பைல்களை டவுண்லோட் செய்திடும் வகையில் இதனை செட் செய்திடலாம். இதற்கு, ஸ்பேனர் ஐகான் கிளிக் செய்து, Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து ‘Show advanced settings’ என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு கீழாக உள்ள Downloads பிரிவிற்குச் செல்லவும். இங்கு அப்போது மாறா நிலையில் உள்ள போல்டர் காட்டப்படும். இங்கு உள்ள இடச்ணஞ்ஞு பட்டனில் கிளிக் செய்து, நீங்கள் விரும்பும் போல்டரை பிரவுஸ் செய்து தேர்ந்தெடுத்து அமைக்கவும். பின்னர் ஓகே கிளிக் செய்திடவும். இதற்கு மாறாக, ஒவ்வொரு முறையும், பைலின் தன்மைக்கேற்ப, உங்கள் பைல் நீங்கள் குறிப்பிடும் போல்டரில் சேவ் செய்யப்பட வேண்டும் எனில், ‘Ask where to save each file before downloading’ என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதனைத் தேர்ந்தெடுத்து அமைத்தால், ஒவ்வொரு முறை பைல் தரவிறக்கம் செய்திட இருக்கையில், சிறிய விண்டோ ஒன்றைக் காட்டி, எங்கு பைலை சேவ் செய்திட வேண்டும் என்ற கேள்வி கேட்கப்படும். இங்கு கம்ப்யூட்டரில் உள்ள எந்த போல்டரையும் தேர்ந்தெடுத்து சேவ் செய்திடுமாறு அமைக்கலாம். கண்ட்ரோல் அழுத்திக் கொண்டு ஒ கீயை அழுத்தினால், குரோம் பிரவுசரின் டவுண்லோட் மேனேஜர் திறக்கப்படும். இங்கு டவுண்லோட் செய்து கொண்டிருப்பதனைச் சற்று நேரம் நிறுத்தி வைக்கலாம்; ரத்து செய்திடலாம். ஏற்கனவே டவுண்லோட் செய்த பைலை, அங்கு தரப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி, மீண்டும் டவுண்லோட் செய்திடலாம்.



7. கீ போர்ட் ஷார்ட் கட் பயன்பாடு:


வழக்கமாக, எந்த அப்ளிகேஷன் புரோகிராம்களில் இருப்பதைப் போல, குரோம் பிரவுசரிலும் சில ஷார்ட் கட் கீகள் கிடைக்கின்றன. இவற்றில் சிலவற்றை நாம் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, Alt and Home என்ற கீகளை அழுத்தினால், புதிய டேப் ஒன்று திறக்கப்படும். இணைய தளத்தில் ஏதேனும் லிங்க் தரப்பட்டிருந்தால், கண்ட்ரோல் அழுத்தியவாறு அதில் கிளிக் செய்தால், புதிய டேப்பில், அந்த தளம் திறக்கப்படும். Control, Shift and T கீகளை அழுத்தினால், இறுதியாக மூடப்பட்ட இணைய தளம் திறக்கப்படும். மீண்டும் இதே கீகளை அழுத்த, அதற்கு முன்னர் மூடப்பட்ட தளம் திறக்கப்படும். Control, Shift and N கீகளை அழுத்தினால், நம் பிரவுசிங் அறியப்படாத வகையில், பின்பற்றக்கூடாத வகையில் (Incognito window) இணையத்தில் செல்ல ஒரு விண்டோ திறக்கப்படும். இதனைத்தான் பிரைவேட் பிரவுசிங் என்று கூறுகிறோம். Control, Shift and Delete என்ற கீகளை அழுத்தினால், நம்முடைய பிரவுசிங் ஹிஸ்டரி அழிக்கப்படும். அனைத்து ஷார்ட் கட் கீ தொகுப்புகளையும், அவற்றின் பயன்பாடுகளையும் அறிய https:// support.google.com/chrome/bin/answer.py?hl=en&answer=157179என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும்.



8. தங்க நிறத்தில் க்ரோன் ஐகான்:


குரோம் பிரவுசருக்கான, மாறா நிலையில் உள்ள ஐகான், பல வண்ணங்களில் அமைந்ததாகும். இதனை மாற்றி, தங்க நிறத்திலான குரோம் பிரவுசர் ஐகானையும் அமைத்துக் கொள்ளலாம். இதனைப் பெற, ஸ்டார்ட் அழுத்தி, All Programs என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு கூகுள் குரோம் பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு குரோம் ஐகான் மீது ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் பட்டியலில் Copy என்பதில் கிளிக் செய்திடுக. அடுத்து டெஸ்க்டாப் சென்று, காலியாக உள்ள இடத்தில், பேஸ்ட் செய்திடவும். இந்த புதிய ஐகானில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் ஆப்ஷன்ஸ் கட்டத்தில் ப்ராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும். அடுத்து திறக்கப்படும் டயலாக் பாக்ஸில், ஷார்ட்கட் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து திறக்கும் விண்டோவில், தங்க வண்ணத்தில் உள்ள ஐகானை ஹைலைட் செய்திடவும். அடுத்து இருமுறை ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி குரோம் பிரவுசருக்கான ஐகான் தங்க நிறத்தில் ஜொலிப்பதனைக் காணலாம்.
மேலே தரப்பட்டிருப்பது, அனைவருக்கும் தேவைப்படும் பொதுவான உதவிக் குறிப்புகளே. குரோம் பிரவுசரின் செட்டிங்ஸ் பக்கம் சென்றால், இன்னும் என்னவகையான செயல்பாடுகளை மாற்றி அமைக்கலாம் என்பதனை அறிந்து கொள்ளலாம்.

டிரையல் மென்பொருட்களின் காலக்கெடு தேதியை நீட்டிக்க........








நாம் பெரும்பாலும் சோதனை பதிப்பான மென்பொருட்களை தரவிறக்கி நமது அன்றாட தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டிருப்போம்.ஆனால் சில நாட்களில் அதன் பயன்பாட்டை திருத்தி அசலான மென்பொருளை வாங்குமாறு கேட்கும். இது பெரும்பாலும் 30 நாட்கள் வேலை செய்யக்கூடியதாக இருக்கும்.

ஆனால் அந்த மென்பொருள் உங்களுக்கு தேவைப்பட்டதாக மற்றும் விருப்பபட்டதாக மாறி இருக்கும்.இப்படிப்பட்ட சமயத்தில் அந்த மென்பொருளின் கால அளவை நீட்டிக்க இங்கே கொடுக்கப்பட்டுள்ள மென்பொருளை தரவிறக்கி கணிணியில் பதிந்து கொள்ளவும்.

இந்த மென்பொருளின் மூலம் உங்கள் கணிணியில் உள்ள டிரையல் மென்பொருட்களின் .Exe பைலை தேர்வு செய்து காலக்கெடுவை நீட்டிக்கும் புதிய தேதியினை தேர்வு செய்யுங்கள். பக்கத்திலேயே உங்களுக்கு காலண்டர் கொடுக்கப்பட்டிருப்பதால் தேவைப்படும் கால அளவை எளிதாக நீட்டிக்கலாம்.


இப்படி உருவாக்கிய புதிய மென்பொருளின் பெயரை மாற்றி டெஸ்க்டாப்பில் குறுக்கு வழியாக பதிந்து கொள்ளுங்கள்.இப்போது நீங்கள் தேர்வு செய்து பதிந்த புதிய மென்பொருளின் ஐகானை கிளிக் செய்தால் மென்பொருள் தடையில்லாமல் வேலை செய்யும்.

பெரிய கோப்புகளை இமெயிலில் அனுப்புவது எப்படி?






அனைத்து இமெயில் சேவை வழங்கும் நிறுவனங்களும் (email service provider) இணைப்பு கோப்புகளுக்கான (attachment size) அளவை கட்டுபடுத்தி வைத்துள்ளனர். ஜிமெயிலில் 25MB க்கும் குறைவான அளவுள்ள கோப்புகளை மட்டும் இணைக்க முடியும், மற்ற இமெயில் சேவைகளில் இந்த அளவிற்க்கு கூட முடியாது. பொதுவாக விடியோ கோப்புகள் அல்லது புகைப்படங்களின் தொகுப்புகள் போன்ற ஊடக கோப்புகள் (Media files) தான் பெரிய அளவில் இருக்கும்.

about this ad

WizDrop இதற்கு ஒரு தீர்வாக இருக்கும் என நம்பலாம். WizDrop லிருந்து 100MB அளவுள்ள கோப்புகள் வரை இமெயில் முகவரிக்கோ அல்லது கைபேசிக்கோ அனுப்பலாம். இவ்வாறு wizdrop லிருந்து இமெயில் அனுப்பும் முறையை கீழே காணலாம்.

1. உங்களின் இமெயில் முகவரியை தட்டச்சு செய்யவும்.

2. Browse பொத்தனை அழுத்தி இணைக்க வேண்டிய கோப்பை இணைக்கவும். அனைத்து விதமான விடியோ, ஆடியோ, மற்றும் புகைப்ப்டங்கள் போன்றவற்றையும் இதில் இணைக்க முடியும். ஆனால் இதில் zip format கோப்புறைகளை இணைக்க முடியாது. முன்பே சொன்னதை போல் 100MB அளவுள்ள கோப்புகள் வரை இதில் இணைக்க முடியும்.

உங்கள் கோப்புகள் இணையும் வரை இமெய்லின் subject ஐ தட்டச்சு செய்யலாம். ஆனால் இது இமெயில்க்கு மட்டும் தான். மொபைல் போனில் தெரியாது.

3. உங்கள் கோப்பு அனுப்ப வேண்டிய இமெயில் முகவரி மற்றும் கைபேசி எண் போன்றவற்றை இட்டு, பாதுகாப்பு குறியீட்டை தட்டச்சு செய்யவும்.



4. கடைசியாக, Drop button ஐ அழுத்தவும்.

5. உங்கள் கோப்பு Drop செய்யப்பட்டதாக அறிவிப்பு வரும்.

கிட்டத்தட்ட உடனடியாக, உங்கள் நண்பர்கள் மின்னஞ்சலை, உங்கள் கோப்புகளின் பதிவிறக்க இணைப்புடன் கூடிய இமெயில் அடைந்திருக்கும்.

ஜிமெயில் இவ்வகை மின்னஞ்சல்களை spam உறையினுள் தள்ளிவிடும், எனவே நீங்கள் கோப்புகளை அனுப்பும் முன் பெறுநருக்கு ஒரு தகவலை தெரிவித்துவிடவும். கோப்புகளை பதிவேற்றும் மற்றும் பதிவிறக்கும் வேகங்கள் சாதாரணமாக தான் உள்ளன. ஆனால், இது இப்பொழுது வழக்கத்திலுள்ள மற்றவற்றை விட வேகமாக தான் இருக்கிறது.

வன்தட்டு நிலை நினைவகம்(HARD DISK) -ஐ பாதுக்காப்பது எப்படி?





உங்கள் கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டு இருக்கும் போது, ஏதாவது பிரச்சினைகளினால் கம்ப்யூட்டர் ஆஃப் ஆனால், அல்லது ரீஸ்டார்ட் செய்ய சொல்லி அப்படி செய்தால் hard disk இல் குப்பை உருவாகும். இது போல பல காரணங்களினால் உங்கள் hard Disk குப்பை ஆக வாய்ப்பு உள்ளது. இதனால் திடீர் என்று உங்கள் Hard Disk வேலை நிறுத்தம் செய்து விடும்.

மனிதன் வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கொடுத்து தீர்வு செய்யலாம். இதற்கு என்ன செய்ய முடியும். எனவே வரும்முன் காப்பதே சிறந்தது. அதற்குத்தான் check Disk வசதி உள்ளது. இது கம்ப்யூட்டரில் Chkdsk என்ற பெயரில் அறியப்படும்.

இதன் மூலம் உங்கள் Hard Disk இன் Critical நிலைகளை கண்டறிந்து அவற்றை சரி செய்யலாம். இதனால்உங்கள் கம்ப்யூட்டர் வேகமாக இயங்கவும் வாய்ப்புகள் உள்ளது.

இதை செய்யும் போது கம்ப்யூட்டர் ரீஸ்டார்ட் ஆகும். இது எடுத்துக் கொள்ளும் நேரம் கிட்டதட்ட ஒரு மணி நேரம். கூட குறைய இருக்கலாம். இந்த சமயத்தில் உங்களால் எதுவும் செய்ய இயலாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஆனால் இதை செய்வதன் காரணமாக உங்கள் Hard Disk பாதுகாப்பாக இருக்கும். மிக அதிக நேரம் இயங்கும் கம்ப்யூட்டர் என்றால் மாதம் ஒரு முறையாவது Check Disk செய்து கொள்ளுங்கள்.

எப்படி செய்வது எனக் காண்போம் வாருங்கள்.

1.My Computer உள்ளே நுழைந்து C Drive மீது Right Click செய்து Properties செல்லவும்.

2.அடுத்து வரும் குட்டி விண்டோவில் Tools என்ற Tab ஐ தெரிவு செய்யவும். இதில் Error Check என்பதில் “Check Now” என்பது இருக்கும். அதை கிளிக் செய்யவும். இதற்கு அடுத்து கீழே உள்ள விண்டோ வரும்.

3.இதில் முதலாவது எப்போதும் கிளிக் செய்யப்பட்டு இருக்க வேண்டும். இது System Error களை கண்டறிந்து Automatic ஆக சரி செய்து விடும். இரண்டாவது ஒன்று உங்கள் Disk இன் Bad Sector களை scan செய்து அவற்றை நல்ல நிலைக்கு Recovery செய்யும். இந்த இரண்டாவது option சேர்த்து click செய்தால் Check Disk க்கு மிக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். ஆனால் இது மிகவும் பயனுள்ள ஒன்று. நேரம் ஆனாலும் இதையும் செய்வது நலம்.

4.இப்போது கிளிக் செய்து விட்டு Start என்பதை கொடுக்கவும். இப்போது அடுத்த Window வரும்.

உங்கள் C Drive தான் உங்கள் கம்ப்யூட்டரை இயக்கிக் கொண்டுள்ளது எனவே இதனை இப்போது செய்ய முடியாது எனச் சொல்லி, அடுத்த முறை கம்ப்யூட்டர் Start ஆகும் போது செய்யவா எனக் கேட்கும். அதற்கு வட்டமிடப்பட்டுள்ளதை கொடுத்து விடவும். இப்போது உங்கள் கம்ப்யூட்டரை Restart செய்யவும். இப்போது Check Disk வேலைகள் ஆரம்பிக்கும்.

5.இந்த வேலை முடியும் வரை கம்ப்யூட்டர் OFF ஆகக் கூடாது எனவே சரியான நேரத்தில் இதை செய்யுங்கள்.மோசமான பகுதிகளை கம்ப்யூட்டர் Bad Sector என்று முடிவு செய்து கொள்ளும், இதனால் பிரச்சினை எதுவும் இல்லை. இது முடிந்தவுடன் உங்கள் Hard Disk இன் பிரச்சினைகள் சரி செய்யப்பட்டு விடும். உங்கள் Hard Disk குறித்த விவரங்கள் Check Disk முடிந்த உடன் காண்பிக்கப் படும்.

6.மற்ற Drive களை Check Disk செய்யும் போது அது கம்ப்யூட்டர் ON ஆகி இருக்கும் நேரத்திலயே செய்ய முடியும். ஆனால் C ட்ரைவை (அல்லது நீங்கள் OS இன்ஸ்டால் செய்துள்ள ட்ரைவ் ) Check Disk க்கு உள்ளாக்குவதுதான் Hard Disk க்கு பயனுள்ளது.

உங்கள் Hard Disk ஐ பரமரிப்பது உங்கள் கடமை. எனவே முதலில் chkdsk (check Disk )செய்யுங்கள். உங்கள் Hard Disk ஐ காப்பாற்றுங்கள்

ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் Lock செய்வது எப்படி...?





நாம் வீட்டில் இலாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி என்று பார்க்கலாம்.

முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, passwordகொடுத்து Login செய்யுங்கள்.

பிறகு settings தேர்வு செய்து search settings click செய்யுங்கள்.

Safe serrch Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள்,

விபரங்களுக்கு Click here

இங்கே கிளிக் செய்யவும்.

அடுத்து Safe SearchFiltering கீழே உள்ள Lock safe search கிளிக் செய்துகொள்ளுங்கள்.

Locking Process நடைபெறும்.

பிறகு Safe search Locked என்று தோன்றும் சரியாக Lock ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock safe search கொடுங்கள்.

அவ்வளவுதான் இனி ஆபாசம் சம்மந்தமான எந்த தகவலும் உங்கள் குழந்தைகளுக்கு Google வழங்காது.

இதன் பிறகு google search பக்கத்தில் நீங்கள் Lock செய்தான் அடையாளமாக வண்ண பந்துகள் அடையாளமாக தோன்றும் .

நீங்கள் இதனை Unlock செய்ய மீண்டும் Search setting சென்று unlock என்று மாற்றிவிடுங்கள்.

googleஎவ்வளவு பாதுகாப்பானது பாருங்கள்...!